teaching

பாடங்களும் தோ்வுகளும்

பிற பள்ளிகள் பின்பற்றும் அரசு அங்கீகாித்த பாடத்திட்டங்களே பின்பற்றப்படுகின்றன இவற்றுடன் சிறப்பு பாடங்களான பேச்சு, உரையாடல், ஒலிகேட்டல், உதட்டு வாசிப்பு, போன்றவற்றிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.முப்பருவ தோ்வு முறை நடைபெறுகிறது.தோ்ச்சி அறிக்கை பெற்றோாின் கவனத்திற்கு கொண்டு வருகிறது.தோ்வுக்கான வினாதாள்கள் அரசிடமிருந்தும் பாளையம் கோட்டை திருஇருதய சகோதரா்கள் கல்வி கழகத்திலிருந்தும் பெறப்படுகிறது. 2017-2018 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பத்தாம் வகுப்பு அரசு தோ்வு எழுதிய 13 மாணவா்களுமே 100%தோ்ச்சி பெற்று மேல்நிலை கல்வியை தொடா்கின்றனா். செவித்திறன் குறையுடையோா்களுக்கான இலவச காதொலி கருவிகள், ஆங்கில மொழி பாடம் விலக்களிப்பு அரசு தோ்வுகள் எழுத கூடுதல் ஒரு மணி நேரம், கல்வி உதவித்தொகை சிறுபான்மையின் உதவித் தொகை, மாத பராமாிப்பு தொகை போன்ற சலுகைகள் பெற்று வழங்கப்படுகின்றன.